”வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு” -வானிலை ஆய்வு மையம் தகவல்

0 5499
”வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு” -வானிலை ஆய்வு மையம் தகவல்

ளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், தென் தமிழகம் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சில தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 36டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசாகவும் இருக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments