இறந்த மகனுடன் வீடியோ காலில் பேசும் தாய்... அதிர்ச்சியில் உறவினர்கள்!

0 13687

குஜராத்தில் ஆறு மாதத்திற்கு முன்பு இறந்த தனது மகனுடன் அடிக்கடி வீடியோ காலில் பேசும் தாய் ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த ஓராண்டிற்கு மேலாக உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். நோய் தொற்றால் உயிரிழந்தவர்களை காட்டிலும் அவர்களின் அன்பிற்குரிய உறவினர்களின் நிலை மோசமானதாக உள்ளது. வைரஸ் தொற்று பற்றியும் அதன் உயிரிழப்பு பற்றியும் பேசும் நமக்கு அன்பிற்குரியவர்களை இழந்து தவிர்க்கும் உறவுகளின் நிலை பாரிதாபத்திற்குரியது என்பது தெரியாமல் போகிறது.

உலகளவில் கொரோனா தொற்றுக்கு 30 லட்சத்திற்கு மேற்பட்டோரும் இந்திய அளவில் ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர். இப்படி லட்சக்கணக்கான உயிர்களை கொல்லும் கொரோனாவின் வீரியம் புரியாமல் மந்த நிலையில் நாம் செயல்படுவது வேதனைக்குரிய ஒன்றாகும். இன்னும் வைரஸ் தொற்று குறித்த புரிதலும், அதிலிருந்து தற்காத்து கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது அன்பிற்குரியவர்களை பிரிந்து தவிக்கும் சிலரின் மனக்குமுறல்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள 1200 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனை வாசலில் நின்றிருக்கும் தாய் ஒருவர் கையில் உள்ள தொலைப்பேசியில் வீடியோ கால் மூலம் தனது மகனுடன் பேசிக் கொண்டிருக்கிறார். ”எப்படி இருக்காய் மகனே? உனக்கு நல்ல உணவு கொடுக்கிறார்கள் தானே.. கொரோனாவில் இருந்து நீ சீக்கிரம் குணமடைய நான் இறைவனை வேண்டுகிறேன் “ என பாசத்துடன் கூறுகிறார் அந்த தாய். ஐந்து நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோ உரையாடலை அருகிலிருந்து பார்ப்போரின் கண்கள் கலங்குகின்றன.

ஏனெனில் யாரிடம் அந்த தாய் அன்புடனும், அக்கறையுடனும் பேசுகிறாரோ அந்த மகன் இறந்து 6 மாதங்கள் கடந்து விட்டன. இன்னும் தனது மகன் உயிருடன் இருப்பதாக எண்ணி அவன் இறந்த மருத்துவமனை வாசலில் பேசிக் கொண்டிருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா தொற்றால் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேந்திரா 5 நாட்களில் உயிரிழந்துள்ளார். மரணிப்பதற்கு முன்னதாக தனது தாயுடன் மகேந்திரா வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். அந்த கடைசி நிமிட வீடியோவை பார்த்து தான் தற்பொழுது அந்த தாய் கதறிக் கொண்டிருக்கிறார்.

தனது மகன் உயிருடன் இல்லை என்பது அந்த தாய்க்கு தெரிந்தும், மகனின் இழப்பை அவரது மனம் ஏற்க மறுக்கிறது. அதன் விளைவாக அடிக்கடி சிவில் மருத்துவமனைக்கு வரும் தாய், தன்னிடம் கடைசியாகப் பேசிய மகனின் வீடியோவை பார்த்து அவர் இருப்பதாக நினைத்துப் பேசிக்கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் அந்த தாயை தேற்ற மனமில்லாமல் உறவினர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மகேந்திரா மட்டுமின்றி அவரை போன்று அன்பிற்குரியவர்களை கொரோனா என்னும் கொடிய நோய்க்கு இரையாக்கி தவித்துக் கொண்டிருக்கும் பலரின் நிலை மோசமானதாக உள்ளது என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

பொதுவாக ஒருவர் மரணித்து விட்டால் அவரது உடலை பார்த்து கதறி அழுவதாலும், இறுதி சடங்குகளை செய்வதாலும் மரணித்தவர்களின் பிரிவு அவர்களின் நெருக்கமானவர்களை ஏற்றுக் கொள்ள வைக்கிறது. ஆனால், கொரோனா தொற்றின் தாக்கம் அதனை முற்றிலுமாக தவிர்த்து விடுகிறது. கொரோனாவால் இறந்தவர்களை முழுவதுமாக பார்க்க முடியாத பட்சத்திலும், அருகில் இருந்து இறுதி காரியங்களை செய்து விட முடியாததாலும், ஆறுதல் கூறக்கூட உறவுகள் வரமுடியாததாலும் மன
மனதளவிலும், உடலளவிலும் தனித்துவிடப்பட்ட பலர் சத்தமின்றி தவித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments