நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? தலைமைச் செயலாளர் பதில் அளிக்க உத்தரவு

0 604
நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? தலைமைச் செயலாளர் பதில் அளிக்க உத்தரவு

றுகள், கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யத் தமிழகத் தலைமைச் செயலாளருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் நரையூரில் பாசனக் கால்வாயில் கழிவுநீர் கலப்பது குறித்த பொது நல மனு, தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கழிவுநீரைக் கால்வாயில் விடக் கூடாது என அறிவுறுத்தியுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்யவும், தேவைப்பட்டால் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆறுகள் கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவும், தேவையான இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தத் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களைப் பெற்று விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை மாதத்துக்குத் தள்ளி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments