தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் மனு தாக்கல்

0 4157
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் மனு தாக்கல்

மிழகத்தின் கடும் எதிர்ப்பால் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் மனு தாக்கல் செய்துள்ளது. 

அதில், மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி உற்பத்தி செய்யும் ஆக்சிஜனை தமிழக அரசுக்கு இலவசமாகவே வழங்கவும் தயாராக இருக்கிறோம் என்று வேதாந்தா நிறுவனம் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் தினசரி 1050 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்பதால், அதற்கு அனுமதி கோரி ஸ்டெர்லைட் தலைமை நிர்வாக அதிகாரி பங்கஜ்குமார் நேற்று தமிழக அரசு மற்றும் மத்திய அரசு கடிதம் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments