வெளிச்சந்தையில் கொரோனா தடுப்பூசி விலை எவ்வளவு ?

0 1251
வெளிச்சந்தையில் கொரோனா தடுப்பூசி விலை எவ்வளவு ?

வெளிச்சந்தைகளில் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு வரும் போது ஒரு டோஸ் 700 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஒரு டோஸ் தடுப்பூசி 250 ரூபாய் என்ற விலையில் வாங்கி மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது.

சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனாவாலா, தனியாருக்கு ஒரு டோஸ் கோவிஷில்டு தடுப்பூசி ஆயிரம் ரூபாய் விலையில் விற்கப்படும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அதே போன்று ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இறக்குமதி செய்யும் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம், ஒரு டோஸ் 750 ரூபாய் என்ற விலையில் விற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் தடுப்பூசிக்கான விலையை நிர்ணயம் செய்வது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments