இந்தியா - பிரிட்டன் இடையிலான ஏர் இந்தியா விமான சேவை ரத்து

0 1625
இந்தியா - பிரிட்டன் இடையிலான ஏர் இந்தியா விமான சேவை ரத்து

வரும் 24ந் தேதி முதல் 30ந் தேதி வரை இந்தியா - பிரிட்டன் இடையிலான ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காத அளவிற்கு பரவி வருவதால், இந்தியாவுக்கான விமான சேவையை பிரிட்டன் அரசு நிறுத்தியது. விமான போக்குவரத்து தடைக்கான சிவப்பு பட்டியலில் இந்தியாவையும் சேர்த்தது.

அதனை  சுட்டிக்காட்டி ஏர் இந்தியா நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தை திரும்ப வழங்குவது, விமான சேவை தொடர்பான புதிய அட்டவணை,   தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்று ஏர் இந்தியா கூறி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments