தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்குப் பகல்நேர ஆம்னி பேருந்துகள் இயக்கம்

0 9188
தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்குப் பகல்நேர ஆம்னி பேருந்துகள் இயக்கம்

மிழகத்தில் இரவுநேர ஊரடங்கு உள்ளதால் சென்னை கோயம்பேட்டில் இருந்து பல்வேறு நகரங்களுக்குப் பகல்நேர ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன.

தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் சார்பில் பகல் நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி சென்னை கோயம்பேட்டில் இருந்து காலை 7 மணி முதல் பேருந்துகள் புறப்பட்டுச் சென்றன.

திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, கோவை, சேலம், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களுக்குப் புறப்பட்டு சென்ற ஆம்னி பேருந்துகளில் சராசரியாக 15 பயணியர் வரை சென்றனர்.

பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். 20 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் பயணிகள் வருகை குறைவாக இருந்ததால் குறைந்த எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டன.

சேருமிடங்களின் தொலைவுக்கு ஏற்பப் பிற்பகல் இரண்டரை மணி வரை பேருந்துகள் இயக்கப்படும் என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments