தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.1000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

0 9624

பிரேசில் நாட்டிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு  கடத்தி வரப்பட்ட1000 கோடி ரூபாய் மதிப்புள்ள கொகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

மரத்தடிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு துறைமுகம் வழியாக வந்த அந்த கப்பலில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் கப்பலை சோதனையிட்டபோது, மரத்தடிக்கு இடையே இருந்த  கருப்பு நிற பையில் 300 கிலோ கொக்கைன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு, சுங்க இலாகா துறையினர் மற்றும் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments