டெல்லியில் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது - டெல்லி துணை முதலமைச்சர்

0 972

டெல்லியில் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அடுத்த 8 முதல் 10 மணிநேரத்திற்கு தேவையான அளவில் மட்டுமே ஆக்சிஜன் கையிருப்பு உள்ளதாக கூறிய அவர், டெல்லிக்கான ஆக்சிஜன் ஓதுக்கீடு வரம்பை அதிகரிக்க மத்திய அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

மேலும் ஆக்சிஜன் கையிருப்பை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அது உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் மணிஷ் சிசோடியா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments