உத்தரப்பிரதேசத்தில் பொதுமுடக்கம் தேவையில்லை - உச்ச நீதிமன்றம்

0 1658
உத்தரப்பிரதேசத்தில் பொதுமுடக்கம் தேவையில்லை - உச்ச நீதிமன்றம்

உத்தரப்பிரதேசத்தில் பொதுமுடக்கம் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அம்மாநிலத்தின் அலகாபாத், லக்னோ, கான்பூர், வாரணாசி மற்றும் கோரக்பூர் ஆகிய நகரங்களில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

உத்தரப்பிரதேச அரசு சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டால் மிகப்பெரிய நிர்வாகச் சிக்கலை உருவாக்கும் என்று குறிப்பிட்டார். இதனைக் கேட்ட நீதிபதிகள், கொரோனாவைத் தடுக்க மாநில அரசு போதிய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகக் கூறி அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments