கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி, ஆண்டுக்கு 70 கோடியாக அதிகரிக்கப்படும் -பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு

0 1001
கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி, ஆண்டுக்கு 70 கோடியாக அதிகரிக்கப்படும் -பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு

கோவேக்சின் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை, ஆண்டுக்கு 70 கோடியாக அதிகரிப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போடும் இயக்கத்திற்கு ஊக்கப்படுத்தும் விதத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஹைதராபாத் மற்றும் பெங்களூரு நிறுவனங்களில் படிப்படியாக உற்பத்தி அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும் கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், ஒரு டோஸ் 15 முதல் 20 அமெரிக்க டாலர் விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments