"நாட்டு மக்கள் அனைவரும் கவனத்துடன் இருந்தால் முழு ஊரடங்கு தேவையில்லை"..! -பிரதமர் நரேந்திர மோடி

0 4735
கொரோனாவின் 2ஆவது அலை நாடு முழுவதும் வீசுகிறது..! இந்தியா கொரோனாவுக்கு எதிரான மற்றொரு போரை எதிர்கொண்டுள்ளது -பிரதமர்

நாட்டு மக்களுக்கு பிரதமர் உரை

நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரை

நாட்டில் 2ஆவது கொரோனா அலையால் நாம் மீண்டும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறோம்

கொரோனாவின் 2ஆவது அலை நாடு முழுவதும் வீசுகிறது

இந்தியா கொரோனாவுக்கு எதிரான மற்றொரு போரை எதிர்கொண்டுள்ளது

கொரோனாவால் உயிர் இழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

கொரோனா நோய் தடுப்பு பணிகளில் ஈடுபடும் முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டுகள்

உயிர்களை காப்பாற்றும் பணியில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் களைப்பின்றி பணியாற்றுகின்றனர்

சிக்கலான நேரத்தில் நாம் அனைவரும் பொறுமை இழக்காமல் இருக்க வேண்டும்

கொரோனா பாதிப்பால், மக்கள் படும் துன்பம் எனக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது

ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

ஆக்சிஜன் சப்ளையை அதிகரிக்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிப்பு, தடையற்ற ஆக்சிஜன் விநியோகம் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உச்ச திறனில் இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது

கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு சிகிச்சை மையங்களை ஏற்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது

கொரோனா தடுப்பூசிகளுக்கு விரைந்து அனுமதி வழங்க அரசு நடவடிக்கை

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்

இதுவரைக்கு 12 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசிப் போடப்பட்டுள்ளது

அதிர்ஷ்டவசமாக நம்மிடம் மிக வலிமையான மருத்துவக் கட்டமைப்பு உள்ளது

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி

மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 50% நேரடியாக மாநிலங்களுக்கு விநியோகம்

நாட்டின் பொருளாதாரம் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

கடந்தாண்டு இருந்ததைவிட, தற்போது சூழ்நிலை வேறுவிதமாக உள்ளது

கடந்தாண்டு இருந்ததைவிட, தடுப்பூசி உள்ளிட்ட நோய் தடுப்பு கட்டமைப்பு வலுவாக உள்ளது

குறுகிய காலத்தில் கொரோனாவுக்கு எதிரான சுகாதார கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது

அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுவது தொடரும்

புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிபுரியும் மாநிலங்களிலேயே தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்

இளைஞர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உற்சாகத்துடன் ஈடுபட வேண்டும்

உதவி தேவைப்படுவோருக்கு நாட்டு மக்கள் அனைவரும் உதவிட வேண்டும்

கவனமாக இருந்தால் முழு ஊரடங்கு தேவையில்லை

நாட்டு மக்கள் அனைவரும் கவனத்துடன் இருந்தால் முழு ஊரடங்கு தேவையில்லை

அவசியமின்றி வீட்டை விட்டு வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள இடங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

மாஸ்க் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments