ஆக்ஸிஜனாவது உற்பத்தி செய்து தர்றோம்ண்ணே; ஸ்டெர்லைட் திடீர் கடிதம்..! நாதஸ் திருந்திட்டானா?!

0 8092
ஆக்ஸிஜனாவது உற்பத்தி செய்து தர்றோம்ண்ணே; ஸ்டெர்லைட் திடீர் கடிதம்..! நாதஸ் திருந்திட்டானா?!

மிழகத்தில் கொரோனா நோயாளிகளை காப்பாற்ற ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தருவதாகவும் அதற்காக அனுமதி அளிக்க கோரியும், ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் தமிழக முதல் அமைச்சருக்கும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆக்ஸிகன் பற்றாக்குறையால் கொரொனா பாதிக்கப்பட்ட சில நோயாளிகள் பலியானதாக தகவல் வெளியானது.

குறிப்பாக தமிழகத்தில் வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 5 கொரோனா நோயாளிகள் பலியானதாக தகவல் வெளியான நிலையில் கொரோனா நோயாளிகளின் உயிரை காக்க தாங்கள் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தருவதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் திடீர் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது.

தூத்துக்குடியில் இழுத்துப்பூட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையின் ஒரு பகுதியில் தினமும் 1050 மெட்ரிக் டன் அளவுள்ள ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பிளாண்ட் உள்ளதாகவும், அதனை செயல்பட அனுமதி அளித்தால் மக்கள் உயிர் காக்க ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தருவதற்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் தயாராக இருப்பதாக ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் தலைமை செயல் அதிகாரி பங்கஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இதற்கான அனுமதி கோரி பங்கஜ்குமார், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்த்தனுக்கும், தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். இதற்க்கிடையே வேலூர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பிற்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணம் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்துள்ளார்

ஏற்கனவே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டை இழுத்துப்பூட்டியதால் தொழில்வளம் குறைந்து விட்டதாகவும், உலக அளவில் காப்பர் விலை உயர்ந்து விட்டதாகவும் கூறி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கேட்கப்பட்டபோது , நீதிமன்றமும் மத்திய மாநில அரசுகளும் அனுமதியளிக்கவில்லை.

இந்த நிலையில் கொரோனா உயிரிழப்பை காரணம் காட்டி ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதி கேட்டிருப்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments