திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் 19 பெண்கள் அடைத்து வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரணை

0 4735
திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் 19 பெண்கள் அடைத்து வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரணை

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் 19 பெண்கள் அடைத்து வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் வேலம்பாளையத்தில் உள்ள ஜேப்ஸ் பின்னலாடை நிறுவனத்திற்கு பணிக்காக ஒடிசாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 19 பெண்களை அந்நிறுவனம் அடைத்து வைத்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வருவாய்துறையினர் 19 பெண்களையும் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மாநில மனித உரிமை ஆணையம், இதுகுறித்து இரண்டு வாரங்களில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரும், தொழிலாளர் நலத்துறை ஆணையரும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments