”இரவு நேர ஊரடங்கில் தடையை மீறி வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்” -சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை

0 5738
”இரவு நேர ஊரடங்கில் தடையை மீறி வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்” -சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை

சென்னையில் இரவு நேர ஊரடங்கில் தடையை மீறி வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.

இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் அமல் படுத்தப்படுகிறது. இந்நிலையில் சென்னையில், இரவு நேர ஊரடங்கின் போது பாதுகாப்புப் பணியில் கூடுதலாக 2,000 போலீசார் ஈடுபடுவார்கள் எனவும் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.

10 மணிக்கு சென்னையில் மேம்பாலங்கள் அனைத்தும் மூடப்படும் என்றும் மருத்துவ காரணங்கள் உட்பட நியாயமான காரணங்களுடன் ஆவணங்கள் காண்பித்தால் அனுமதி அளிக்கப்படும் எனவும் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments