ஆற்று நீரை பாதுகாப்பதில் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது..! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

0 1488
ஆற்று நீரை பாதுகாப்பதில் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது..! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

மிழ்நாடு முழுவதும் தொழிற்சாலைக் கழிவுகள் மூலம் நதிகள் மாசடைவதை தடுப்பது குறித்து ஆலோசனைகள் வழங்க நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதியின் துணை நதிகளில் ஒன்றான அமராவதி நதி, அருகில் உள்ள தொழிற்சாலை கழிவுகளால் மாசடைவதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், நதிகள் மாசடைவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், நதிகளில் தொழிற்சாலைகள், கழிவுகள் கொட்டுவது, கழிவுநீர் வெளியேற்றுவதை தடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் நீரின் தரத்தை பாதுகாப்பதில் அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தினர். கூவம் நதி மீது கட்டப்பட்டுள்ள நேப்பியர் பாலத்தின் மீது ஏசி காரில் செல்லும்போது கூட, துர்நாற்றம் வீசுவதாகவும் தலைமை நீதிபதி வேதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments