தமிழக இரவு நேர ஊரடங்கு அமல்..!

0 3854
தமிழக இரவு நேர ஊரடங்கு அமல்..!

மிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளும் நடைமுறைக்கு வருகின்றன.

தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இதன்படி இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கின் போது தனியார் பொது போக்குவரத்து ஆட்டோ, டாக்சிக்கு அனுமதி இல்லை. மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி போன்றவை அனுமதிக்கப்படும். பெட்ரோல், டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்படும் என தமிழக அரசு அறிவித்தது.

தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து மற்ற நகரங்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக இரவு 10 மணிக்குள் சம்பந்தப்பட்ட இடத்தை சென்று சேரும் வகையில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நெல்லை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னை மற்றும் பிற மாநிலங்களுக்கு இரவில் செல்லும் பேருந்துகள் பகல்நேர பேருந்துகளாக இயக்கப்பட்டன. அதேபோல் சென்னை கோயம்பேட்டிலிருந்து தென் மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன. புறப்படும் இடத்திலிருந்து இரவு 8 மணி முதல் 9.30 க்குள் சேருமிடத்தை அடையும் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பேருந்தில் பயணிக்கும் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தப்பட்ட பின்னரே பயணிகள் ஏற அனுமதிக்கப்பட்டனர்.

இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது சென்னையில் 200 இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபடு உள்ளனர். இன்று இரவு 10 மணிக்கு பின்னர் சென்னையில் உள்ள 38 பெரிய பாலங்கள் மூடப்படுகின்றன. இதே போன்று முக்கிய நகரங்களில் உள்ள பாலங்கள் மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments