புனேவில் இருந்து 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் தமிழகம் வருகை

0 951
புனேவில் இருந்து 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் தமிழகம் வருகை

புனேவில் இருந்து 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்தன.

தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 48 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், சில இடங்களில் தடுப்பூசி இருப்பு இல்லாததால், ஊசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், கூடுதலாக தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்க தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டது.

அதன்படி, 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் புனேவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments