திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடை ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா

0 2027

சென்னை அண்ணாசாலையில் உள்ள திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடை ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, கடை மூடப்பட்டது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேரும், தண்டையார் பேட்டை கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அடுத்த 3 நாட்களுக்கு கடையை திறக்க கூடாது என்றும், கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

வேறு ஊழியர்கள் யாருக்கும் கொரோனா அறிகுறிகள் இருந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தலப்பாகட்டி பிரியாணி கடை நிர்வாகத்தினரை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments