கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறான தகவல்களைப் பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

0 12790

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாள் நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அதுதொடர்பாக மன்சூர் அலிகான் கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையில், சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டல அதிகாரி, வடபழனி காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது புகார் அளித்தார்.

கொரோனா தடுப்பூசி குறித்தும் அரசிற்கும் எதிராகவும் அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில், கலவரத்தை தூண்டுதல், நோய்த்தொற்றை பரப்புதல், அவதூறு பரப்புதல் மற்றும் தொற்றுநோய் தடுப்புச் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்ட பிரிவுகள் என 5 பிரிவுகளின் கீழ் மன்சூர் அலி கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments