புனேவில் இருந்து 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று தமிழகம் வருகை

0 1326

புனேவில் இருந்து 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று தமிழகம் வருகின்றன. தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதுவரை சுமார் 48 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், சில இடங்களில் தடுப்பூசி இருப்பு இல்லாததால், ஊசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவில் இருந்து இன்று தமிழகம் அனுப்பி வைக்கப்படுகின்றன. தமிழகத்திற்கு இதுவரை 47லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசியும், 8லட்சம் கோவேக்சின் தடுப்பூசியும் கிடைக்கப்பெற்றுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments