தமிழகத்தில் நேற்றுவரை முகக்கவசம் அணியாதது தொடர்பாக ரூ.8.67 கோடி அபராதம் வசூல்

0 4732

தமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி முகக்கவசம் அணியாதவர்களிடம் நேற்றுவரை 8.67 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் கட்டாயம்  முகக்கவசம் அணியவும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவிறுத்தப்பட்டு வரும் நிலையில் அதனை மீறுவோர் மீது வழக்கு பதிந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று மட்டும் தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் இருந்ததாக  30 ஆயிரத்து 494 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்றுவரை முகக்கவசம் அணியாதது தொடர்பாக 8 கோடியே 67 லட்சம் ரூபாயும், தனிமனித இடைவெளியை பின்பற்றாதது தொடர்பாக 70 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments