அதிவேகமாக வந்த இருசக்கர வாகனங்கள்... விளம்பர பலகையில் மோதி தூக்கிவீசப்பட்ட இளைஞர்கள்

0 33155

திருப்பூரில் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

முதலிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் விஸ்வாவும், சதீஷூம் நண்பர்களுடன் இரண்டு இரு சக்கர வாகனங்களில் போட்டிப்போட்டிக் கொண்டு அதிவேகமாக வந்தனர். அவர்கள் விஜயாபுரம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த பைக்குகள் பெட்ரோல் பங்க் முன் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பலகை மீது பலமாக மோதின.

விளம்பர பலகையில் மோதிய வேகத்தில் தூக்கிவீசப்பட்ட இளைஞர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். கடந்த 5-ம் தேதி நடந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments