இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்து 59 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

0 1630

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து 2 லட்சத்து 59 ஆயிரமாகப் பதிவாகியுள்ளது.

நேற்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, முந்தைய 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், முந்தைய நாள் பாதிப்பை விட சுமார் 15 ஆயிரம் குறைந்து, கடந்த 24 மணி நேரத்தில், 2 லட்சத்து 59 ஆயிரத்து 170 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் பலி எண்ணிக்கை சற்று அதிகரித்து ஆயிரத்து 761 ஆகப் பதிவாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,54,761 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேசமயம், கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 12 கோடியே 71 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments