சென்னை ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க நடைமேடை சீட்டு வழங்கப்படாது என அறிவிப்பு

0 5617

சென்னை ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க பொது மக்களுக்கு நடைமேடை சீட்டு வழங்கப்படாது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கொரோனா 2-வது அலை காரணமாக சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல், அரக்கோணம், காட்பாடி, செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருடன் வருபவர்களுக்கு மட்டும் நடைமேடை சீட்டுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments