இங்கிலாந்தில் ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதி போட்டி நடைபெறும்: ஐ.சி.சி. உறுதி

0 3137

ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி திட்டமிட்டபடி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்து உள்ளது.

ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இங்கிலாந்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இங்கு பரவும் புதிய வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில் சிக்கல் நிலவியது.

இந்த நிலையில் பிரிட்டன் அரசுடனான பேச்சுவார்த்தைக்கு பின் திட்டமிட்டபடி இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான இறுதி போட்டி பாதுகாப்பு வளையத்திற்குள் சவுதாம்டன் நகரில் நடைபெறும் என்று ஐ.சி.சி. அறிவித்து உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments