கொரோனா தடுப்பூசிகளைத் தயாரிக்கும் இரு நிறுவனங்களுக்கு ரூ.4,567.50 கோடி நிதி: மத்திய நிதியமைச்சர் ஒப்புதல்

0 1453

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 2 கொரோனா தடுப்பூசி நிறுவனங்களுக்கு 4 ஆயிரத்து 567 கோடி ரூபாய் நிதியை முன்பணமாகக் கொடுக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்து உள்ளார்.

கொரோனா பாதிப்புகளை தடுக்க இந்தியாவில் அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.  இதன்படி, கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என பல மாநிலங்களில் இருந்து கோரிக்கைகள் வெளிவரும் சூழலில், மத்திய நிதி அமைச்சகம் சீரம் நிறுவனத்துக்கு 3 ஆயிரம் கோடி ரூபாயும், பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு ஆயிரத்து 567 கோடி ரூபாயும் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments