அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி- அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

0 1608
அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்

அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பைடன், 16 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் தடுப்பூசி பெறத் தகுதியானவர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தடுப்பூசி பாதுகாப்பானது என்று தெரிவித்துள்ள பைடன், தொற்று நோயை முடிவுக்கு கொண்டுவரும் நேரம் நெருங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

முதலில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பின்னர் மே 1ம் தேதி முதல் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று குறிப்பிட்டிருந்த அவர், தற்போது அந்த இலக்கை முன்கூட்டியே கடந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments