குடிச்சா இடிப்போம்... கார் விபத்தும், வில்லங்க பொண்ணும்..!

0 22355
குடிச்சா இடிப்போம்... கார் விபத்தும், வில்லங்க பொண்ணும்..!

செங்கல்பட்டு அருகே குடிபோதையில் வாகனம் ஓட்டிய பெண் ஒருவர் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய நிலையில், மறித்துப்பிடித்த உள்ளூர் இளைஞர்களிடம் மல்லுக்கு நின்ற தோழியால் போலீசில் சிக்கி உள்ளனர்.

சென்னை துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராமானுஜம் ஓய்வு பெற்ற தலைமை செயலக ஊழியர் இவரது மகள் சித்ரபாலா, தோழி நான்சியுடன் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு, நிகழ்ச்சி முடிந்ததும் அவரது காரில் ஏறி திருப்போரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

திருவடிசூலம் காப்புக்காடு பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது சாலையின் எதிர்திசையில் வந்த விக்னேஷ் என்பவரின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனைக்கண்ட சக வாகன ஓட்டிகள் 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று காரை சிறைப்பிடித்தனர். அப்போது காரில் இருந்து இறங்கிய சித்ராபாலா மற்றும் அவரது தோழி நான்சி ஆகியோர் காரை மடக்கிய இளைஞர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர்

இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தபின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடனடியாக இருபெண்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அவர்கள் மது அருந்தியுள்ளனரா ? என்று சோதனை செய்த போதும் அவர்களது அளம்பல் சற்று அதிகமாகவே இருந்தது.

சோதனையில் நான்சி மட்டும் மது அருந்தி இருந்தது உறுதி செய்யப்பட்டது. வாகனத்தை ஓட்டி வந்த சித்திரபாலா மது அருந்தவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர் . ஆனால் இதனை ஏற்க மறுத்த இளைஞர்கள், இருவரும் மது அருந்தி இருப்பதாக கூறி மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விபத்தில் சிக்கிய விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்தியது, செய்த குற்றத்திலிருந்து தப்பிக்க முயன்றது, தடுத்து நிறுத்தியவர்களை ஆபாசமாக பேசியது உள்ளிட்ட வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments