உலக நாடுகள் சில மாதங்களுக்குள் கொரோனாவை விரட்டி விட முடியும்-WHO

0 4763
உலக நாடுகள் அடுத்த சில மாதங்களுக்குள் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் அடுத்த சில மாதங்களுக்குள் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோல் அதானோம் சில மாதங்களில் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து சாதனங்களும் இப்போது உலக நாடுகளிடம் இருப்பதாகத் தெரிவித்தார்.

அவற்றை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார். வளர்ந்த செல்வம் பொருந்திய நாடுகள் இளைஞர்களுக்கும் ஆரோக்கியமானவர்களுக்கும் தடுப்பூசி போடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தேவை அதிகமான இடங்களுக்குத் தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என்றும் டெட்ரோஸ் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments