ஐ.பி.எல். போட்டி: ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி!

0 4074

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் பாப் டுபிளஸ்சிஸ் 33 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 49 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்த போதிலும் தொடர்ந்து வந்த வீரர்கள் ரன் குவிக்க தவறினர். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டும் எடுக்க முடிந்ததால் தோல்வியடைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments