மருந்து தயாரிப்பு நிறுவனப் பிரதிநிதிகளுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை

0 1042
மருந்து தயாரிப்பு நிறுவனப் பிரதிநிதிகளுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை மத்திய அரசு தளர்த்தியுள்ள நிலையில் மருந்து உற்பத்தியை அதிகப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி இன்று தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். 

மே ஒன்றாம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி போடலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தேவையான தடுப்பூசிகளை மாநில அரசுகளும் தனியார் மருத்துவமனைகளும் நேரடியாகக் கொள்முதல் செய்து கொள்ளவும் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் உயிர்காக்கும் ரெம்டிசிவர் மற்றும் கோவாக்சின் , கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மருந்து தயாரிப்பாளர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். தொடர்ச்சியாக பல்வேறு அரசு உயர் அதிகாரிகள், சுகாதாரத் துறையினர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திவரும் மோடி இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் மருந்து உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்களை குறித்து விவாதிக்க உள்ளார்.

இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் அவசர காலப்பயன்பாட்டுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் வெளிநாட்டுமருந்து தயாரிப்பு நிறுவனங்களான ஆஸ்ட்ரா ஜெனிகா ,ஸ்புட்னிக் பிரதிநிதிகளும் பங்கேற்க வாய்ப்புள்ளது. மேலும் பல வெளிநாட்டுத் தடுப்பு மருந்துகளையும் இந்தியா பயன்படுத்த திட்டமிட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments