ஊரடங்கால் மீண்டும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம்..! மக்களுக்கு உதவ மத்திய-மாநில அரசுகளுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

0 3901
ஊரடங்கால் மீண்டும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம்..! மக்களுக்கு உதவ மத்திய-மாநில அரசுகளுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஊரடங்கு காரணமாக மீண்டும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளதால், நலத்திட்ட உதவிகள் மற்றும் நிவாரண உதவிகளை வழங்குமாறு, மத்திய - மாநில அரசுகளுக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வர உள்ளதை அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டி உள்ள அவர், கொரோனா பரவலை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா 2- வது அலை வேகமாக பரவி வருவதால்,கபசுர குடிநீர் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை எடுத்துக் கொள்ளுமாறு முக.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments