முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி..!

0 1607
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி..!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லேசான அறிகுறிகள் இருந்ததை அடுத்து மன்மோகன் சிங்கிற்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதை அடுத்து மன்மோகன் சிங் டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

89 வயதான மன்மோகன் சிங் கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி முதல் டோஸ் கோவாக்சின் தடுப்பூசியும், ஏப்ரல் 3ம் தேதி இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடதக்கது. இதனிடையே தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments