கொரோனாவின் கோரத் தாண்டவம்..!

0 1724
கொரோனாவின் கோரத் தாண்டவம்..!

கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் டெல்லி, உத்திரப்பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், படுக்கைகள் இன்றி நோயாளிகள் தவித்து வருகின்றனர். மருத்துவமனை வாசல்களில் நோயாளிகள்... மயான வாசல்களில் சடலங்கள்...என்று பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் கொரோனாவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் மருத்துவமனைகளில் இடம் இல்லாததால் ஆம்புலன்ஸ்களிலேயே காத்துக்கிடக்கின்றனர்.
பல மருத்துவமனைகளில் ஸ்டெச்சரிலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே படுக்கையில் இரண்டு அல்லது மூன்று நோயாளிகளை படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

குஜராத்திலும் கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் ஆக்சிஜன் இன்றி தவிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன.

உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் சடலங்களை எரிக்க மயானங்களில் இடம் இல்லாததால் சாலையோரங்களில் வரிசையாக வைத்து சடலங்களை எரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதே போன்று மத்தியப்பிரதேசத்திலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு மரணமடைந்தவர்களின் சடலங்கள் மயானங்களில் காத்துக்கிடக்கின்றன. அங்குள்ள மயானங்களில் நள்ளிரவிலும் சடலங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன.

கர்நாடக மாநிலம் எலகங்காவில் (Yelahanka) கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் சடலங்களை எரிப்பதற்காக அவர்களது உறவினர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். மயானத்தின் அருகே சடலங்களுடன் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன.

உயிர் காக்கும் மருத்துவமனைகளை நாடி செல்லும் நோயாளிகளை படுக்கையில் வைத்து சுவாசிக்க ஆக்சிஜன் கொடுத்து நோய் குணமாக ரெம்டெசிவிர் மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்க முடியாத நெருக்கடி நிலை நிலவுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments