தமிழ்நாட்டில் இன்று 10,941 பேருக்கு கொரோனா உறுதி: 44 பேர் உயிரிழப்பு

0 2332
தமிழ்நாட்டில் இன்று 10,941 பேருக்கு கொரோனா உறுதி: 44 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் புதிய உச்சமாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு, 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 10,941பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 6172 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கன்னியாகுமரியை சேர்ந்த 28 வயது இளம்பெண் உள்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 44 பேர் உயிரிழந்தனர். சென்னை பெருநகரில், மேலும் 3347 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 25 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 970 பேருக்கும், கோயம்புத்தூரில் 735 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. 28 மாவட்டங்களில் மூன்று இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. ஒரே நாளில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 590 ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும், 75 ஆயிரத்து 116 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments