கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியைப் அதிகரிக்க சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு ரூ. 4500 கோடி கடன் வழங்க மத்திய அரசு ஒப்புதல்

0 1408
கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியைப் பலமடங்கு அதிகரிக்க சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு ரூ. 4500 கோடி கடன் வழங்க மத்திய அரசு ஒப்புதல்

கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரிப்பதற்காக இரண்டு மருந்து நிறுவனங்களுக்கு நாலாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் கடன் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தடுப்பு மருந்து உற்பத்தியைப் பல மடங்கு அதிகரிப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இரண்டு மருந்து நிறுவனங்களுக்கு மொத்தம் நாலாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் கடன் வழங்க மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதில் புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனத்துக்கு மூவாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாயும், ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு ஆயிரத்து ஐந்நூறு கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளதாகவும், இந்தக் கடன் தொகை கூடிய விரைவில் விடுவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments