42 வயது கள்ளகாதலியுடன் சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட 32 ... வழிப்பறி கொள்ளையனாக மாறிய டாட்டூ கலைஞர்!

0 101665

கள்ளக்காதலியுடன் சொகுசு வாழ்க்கை வாழ அசைப்பட்டு, வழிப்பறி கொள்ளையனாக மாறியுள்ளார் பிரபல டாட்டூ கலைஞர் வசந்த்.

நூடுல்ஸ் போன்ற ஹைர் ஸ்டைலுடன், சினிமா வில்லன் போல காணப்படும் இவர் தான் வசந்த் என்கிற பவர் வசந்த் .அழகாக டாட்டூ வரைவதில் வசந்த் ஜெகஜால கில்லாடி என்று கூறப்படுகிறது. இவர் வடபழனியில் ’பவர் ட்ராகன்’ என்ற பெயரில் டாட்டூ ஸ்டூடியோ ஒன்றையும் வைத்துள்ளார்.

டாட்டூ மட்டும் அல்லாமல், ஓவியம் வரைவதிலும், தற்காப்பு கலைகளிலும் பவர் வசந்த் பவர்புஃல் ஆனவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரிடம் டாட்டூ வரைந்து கொள்வதற்காக வடபழனியைச் சேர்ந்த 42 வயதான மங்கள தேவி என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதன்மூலம் எம்.எஸ்.சி, எம்.பில் பட்டதாரியான மங்கள தேவிக்கும், டாட்டூ கலைஞன் வசந்த் ப்ரியனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளகாதலாக மாறியுள்ளது.

இதனால், ஏற்கனவே திருமணமான டாட்டூ வசந்த், வீட்டிற்கு செல்லாமல் மங்கள தேவியுடன் சொகுசு விடுதிகளில் மங்கலம் பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தனது சொகுசு வாழ்க்கைக்கு டாட்டூ கடைமூலம் கிடைக்கும் பணம் போதவில்லை என்பதால் வில்லிவாக்கம், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் தனது நண்பர்களுடன் சேர்ந்து செல்போன் பறிப்பு, சங்கிலி பறிப்பு போன்ற வழிபறி கொள்ளையில் ஈடுபடுவதை பார்ட் டைம் ஜாபாக செய்து வந்துள்ளான்.

இந்த நிலையில் செல்போன் சிக்னல்களின் அடிப்படையில், கொள்ளை கும்பலைச் சேர்ந்த திருவள்ளூர், அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த சங்கர் , மனோஜ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மாமல்லபுரத்தில் சொகுசு விடுதியொன்றில் தங்கியிருந்த டாட்டூ கலைஞன் பவர் வசந்த் அவனது காதலி மங்களதேவி மற்றும் வினோத் ஆகியோரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments