கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்தியப் பயணம் மீண்டும் ரத்து

0 1049
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்தியப் பயணம் மீண்டும் ரத்து

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பிரிட்டன் பிரதமரின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த ஜனவரியில், குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக போரிஸ் ஜான்சன் பங்கேற்க இருந்த நிலையில், இங்கிலாந்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், அடுத்த வாரத்தில் போரிஸ் ஜான்சன் இந்தியா வரத் திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போதுள்ள கொரோனா வைரஸ் சூழ்நிலையை கருதி, அவரது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, இந்தியா-பிரிட்டன் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்- பிரதமர் மோடி ஆகிய இரு தலைவர்களும் இம்மாத இறுதியில் பேசிக் கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments