17 வயது சிறுமியிடம் அத்துமீறியதாக நடிகர் டேனி மீது நெட்டிசன்கள் கொந்தளிப்பு... வழக்கறிஞர் வழியாக விளக்கம்

0 44718
17 வயது சிறுமியிடம் அத்துமீறியதாக நடிகர் டேனி மீது நெட்டிசன்கள் கொந்தளிப்பு... வழக்கறிஞர் வழியாக விளக்கம்

17 வயது சிறுமியிடம் அத்துமீறியதாக நடிகர் டேனி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு அவரின் வழக்கறிஞர் விளக்கமளித்துள்ளார்.

கடந்த 2013ஆம் வெளியான இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு நண்பனாக ரொம்ப சுமார் மூஞ்சி குமார் என்ற கதாபாத்திரத்தில் டேனியல் என்ற டேனி நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். லட்சக்கணக்கானோர் டேனியலின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் 17 வயது சிறுமியிடம் அத்துமீறி பேசியதாக டேனி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பகல் நேரங்களில் சாதரணமாக குறுந்தகவல்களை அனுப்பும் டேனி இரவு நேரத்தில் சிறுமியின் போட்டோவை கேட்டு தொல்லை கொடுத்துள்ளதாகவும் சில நேரங்களில் வீடியோ காலில் பேச வற்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் டேனி சிறுமிக்கு அனுப்பிய குறுந்தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால், ஏராளமானோர் டேனியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் டேனி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் வழக்கறிஞர் வழியாக டேனியல் விளக்கமளித்துள்ளார். அதில், கடந்த 4 நாள்களாக தன் தரப்பு மீது தவறான வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. சமுதாயத்தில் அவருக்குள்ள நற் பெயரை கலங்கப்படுத்தும் வகையில் சிலர் செயல்படுகின்றனர். எனவே, அவரை பற்றி வெளியிடப்பட்ட மீம், வீடியோ, பதிவுகள் போன்றவை உடனடியாக அகற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் சைபர் கிரைம் வழியாக கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் '' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments