பல்சர் பைக்கின் பூட்டை உடைத்துத் திருடிய மர்மநபர்கள்-சிசிடிவி காட்சிகள்

0 1403
திருவள்ளூரில் கடைக்கு வெளியே நிறுத்தியிருந்த பல்சர் பைக்கை மர்மநபர்கள் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருவள்ளூரில் கடைக்கு வெளியே நிறுத்தியிருந்த பல்சர் பைக்கை மர்மநபர்கள் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தேவேந்திரன் என்பவர், குமணன் சாவடியில் உள்ள ஒரு தனியார் அழகு நிலையத்தில் தங்கி அங்கேயே பணிபுரிந்து வரும் நிலையில், அக்கடைக்கு வெளியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தனது பல்சர் பைக்கை நிறுத்தியிருந்தார்.

இந்நிலையில் இரவு நேரத்தில் அப்பகுதி வழியே வந்த இருவர், பைக்கின் பூட்டை லாவகமாக உடைத்து அதனை தள்ளிச் சென்றனர்.

புகாரின் பேரில் கடைக்கு வெளியே இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments