அமெரிக்காவில் ஓட்டுநர் இல்லா டெஸ்லா தானியங்கி கார் விபத்தில் சிக்கியதில் இருவர் உயிரிழப்பு

0 2500
அமெரிக்காவில் ஓட்டுநர் இல்லா டெஸ்லா தானியங்கி கார் விபத்தில் சிக்கியதில் இருவர் உயிரிழப்பு

மெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஓட்டுநர் இல்லா டெஸ்லா தானியங்கி கார் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

ஹூஸ்டனுக்கு வடக்கே இரவு நேரத்தில் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்த 2019 ஆம் ஆண்டு வெளியான எஸ் மாடல் டெஸ்லா கார், வளைய முயற்சிக்கும்போது சாலையிலிருந்து விலகி, மரத்தில் மோதி தீப்பிடித்து எரிந்தது.

இதில் காரின் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்தவரும், பின்புற இருக்கையில் அமர்ந்திருந்தவரும் உடல் கருகி உயிரிழந்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

கடந்த மார்ச் மாதத்தில் டெஸ்லா வாகனங்கள் விபத்துக்குள்ளாவது தொடர்பாக 27 விசாரணைகள் நடைபெற்றுவருவதாக அமெரிக்க வாகன பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments