சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுசென்றதற்காக உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்து மீண்டும் மேல்முறையீடு: மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவு

0 581
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுசென்றதற்காக உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்து மீண்டும் மேல்முறையீடு: மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவு

ட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டுவந்தது தொடர்பான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பதில் அளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டவிரோதமாகக் குட்கா விற்கப்படுவதாக கூறி 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குட்காவைக் கொண்டு சென்றதற்காக அவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் 2020 செப்டம்பரில் அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசையும் உயர்நீதிமன்றத் தனி நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ரத்து செய்தார்.

இதை எதிர்த்துச் சட்டப்பேரவைச் செயலாளர், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் சுந்தரேஷ், மஞ்சுளா ஆகியோர், உரிமைக்குழு நீடிக்கிறதா என வினவினர்.

இதே அரசு அமைந்தால் நீடிக்கும் என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், பாஜகவில் இணைந்த கு.க.செல்வமும் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments