கொரோனா தடுப்பூசி பற்றி அவதூறு பரப்பியதாக வழக்கு : முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் மனு

0 899
கொரோனா தடுப்பூசி பற்றி அவதூறு பரப்பியதாக வழக்கு : முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் மனு

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிந்துள்ள நிலையில்,  அவர் முன்ஜாமீன் கோரிச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட  மறுநாள் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.

இதையடுத்துக் கொரோனா தடுப்பூசி குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது.

சென்னை மாநகராட்சி ஆணையர் புகாரின் அடிப்படையில் மன்சூர் அலிகான் மீது வடபழனி காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இதனால், முன் ஜாமீன் கோரி அவர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என்றே தான் கூறியதாகவும், தடுப்பூசி குறித்துத் தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments