இரவு ஊரடங்கால் அரசு விரைவுப் பேருந்துகள் நாளை முதல் பகல் நேரங்களில் இயக்கம்

0 2785

இரவு நேர ஊரடங்கினை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நாளை முதல் பகல் நேரங்களில் இயக்கப்படும்.

ஊரடங்கு காரணமாக, இரவு நேரங்களில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே, பொது மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவைக்கு அனுமதி இல்லை. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், அன்றைய தினம் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. எனவே, விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகள், பயணத் தேதியை மாற்றி அமைத்துக்கொள்ள ஏதுவாக, அருகே உள்ள பேருந்து நிலைய கட்டுப்பாட்டு அலுவலகத்தை அனுகி தகுந்த மாற்று ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

அப்படி இல்லாத பட்சத்தில் கட்டணத் தொகையானது திருப்பி வழங்கப்படும், இணையதள வழி முன்பதிவு செய்த பயணிகள், அதே முறையில் பயணக்கட்டணத்தை திரும்பப்பெற வசதி செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments