கொரோனா தடுப்பூசிக்கு எதிராக சர்ச்சை பேச்சு : சட்ட வல்லூநர் குழு ஆலோசனைபடி மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை காவல் ஆணையர்

0 1114
கொரோனா தடுப்பூசிக்கு எதிராக சர்ச்சை பேச்சு : சட்ட வல்லூநர் குழு ஆலோசனைபடி மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை காவல் ஆணையர்

கொரோனா தடுப்பூசிக்கு எதிராக நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி அளிக்கப்பட்ட புகார் மனு சட்ட வல்லுநர் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.

சென்னை செம்பியம் காவலர் குடியிருப்பில் கொரோனா தடுப்பூசி மையத்தை தொடங்கி வைத்த அவர், இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ள நிலையில், சென்னையில் இரவு நேரங்களில் 200 இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிக்கப்படும் எனவும், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments