சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக ஒரு வாரத்தில் ரூ.36.53 லட்சம் அபராதம் வசூல்

0 845
சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக, ஒரு வாரத்தில் 36லட்சத்து53ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக, ஒரு வாரத்தில் 36லட்சத்து53ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்வதோடு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 36 லட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது முதல் தற்போது வரை சென்னையில் மட்டும் மொத்தமாக 3 கோடியே 71லட்சம் அபராதம் வசூலாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments