கொரோனா பரவலைத் தடுக்க இந்தியாவில் இருந்து ஹாங்காங்கிற்கு விமானங்கள் வரத்தடை

0 974
கொரோனா பரவலைத் தடுக்க இந்தியாவில் இருந்து ஹாங்காங்கிற்கு விமானங்கள் வரத்தடை

கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்து விமானங்கள் ஹாங்காங் செல்வதற்கு 2 வாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் ஞாயிறன்று 30 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர்களில் 29 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

கடந்த 14 நாட்களாக வெளிநாடுகளில் இருந்து சென்றோருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாடுகள் அதிதீவிரக் கொரோனா பரவல் அபாயம் உள்ளவை என ஹாங்காங் வகைப்படுத்தியுள்ளது.

இந்த நாடுகளில் இருந்து விமானங்கள் வருவதற்கு ஏப்ரல் 20 முதல் 2 வாரங்களுக்குத் தடை விதித்துள்ளது.

இதனால் கேதே பசிபிக், ஹாங்காங் ஏர்லைன்ஸ், விஸ்தாரா, சிபு பசிபிக் ஆகிய விமான நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments