தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

0 951
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 4 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

இதனிடையே, நாளை முதல் 2 நாட்களுக்கு வட மாவட்டங்களை உள்ளடக்கி 22 மாவட்டங்களில் அதிகபட்ச பகல் நேர வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.

கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 80% வரை இருக்கும் என்பதால் வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும் என்றும், இளநீர், மோர் மற்றும் நீர்சத்து மிகுந்த காய்கறிகள், பழவகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும், பருத்தி ஆடைகளை அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments