டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 1 வாரத்திற்கு முழு ஊரடங்கு

0 3469

டெல்லியில் இன்று இரவு முதல் வரும் 26ஆம் தேதி காலை வரை 6 நாட்களுக்கு முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒரு நாள் கொரோனா பாதிப்பு டெல்லியில் 25 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.  இன்று  இரவு 10 மணி முதல், வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழுஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

அடுத்த 6 நாட்களில் நோயாளிகளுக்கான படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன் ஏற்பாடுகளில் கவனம் செலுத்தப்படும் எனக் கெஜ்ரிவால் கூறினார்.   6 நாட்களுக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய தேவை ஏற்படாது என தாம் நம்புவதாகக் குறிப்பிட்ட கெஜ்ரிவால், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசு தேவையான உதவிகளை செய்யும் என்பதால், நகரத்தை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments